மலையாளத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களிலும், சில சின்ன படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் மணிக்குட்டன். இவர் தமிழில் உதயநிதி நடித்த ‘நிமிர்’ படத்தில் பார்வதி நாயரின் கணவராக நடித்திருந்தார்.

2005ம் ஆண்டு, இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய் பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.அந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஹனி ரோஸ். இவரும் அந்த படத்திலேயே திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பேட்டியொன்றில், ஹனி ரோஸ் குறித்து மணிக்குட்டன் கூறியதாவது, “நாங்கள் இருவரும் ஒரே படத்தில் தான் திரையுலகில் எங்கள் பயணத்தை தொடங்கினோம். இன்றும் அவருடன் நல்ல நட்பில் இருக்கிறேன். 20 ஆண்டுகள் கடந்தும், நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் எவர்கிரீன் பேச்சுலர்ஸ் ஆகவே இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.