மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தக் லைப். ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் முதல் நாளிலிருந்தே இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. தற்போது இந்த படம் திரைக்கு வந்து 28 நாட்கள் ஆகும் நிலையில் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
