சில மாதங்களுக்கு முன்னர், பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அந்த செய்தி உண்மையல்ல என்பது பின்னர் உறுதியாகியது.

இந்த சூழலில், தற்போது கரீனா கபூர் பிரபாஸ் நடித்துவரும் மற்றொரு திரைப்படத்தில் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ‘தி ராஜாசாப்’ எனும் படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்புப் பாடலுக்காக கரீனா கபூரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கரீனா கபூர் இதற்கு முன்பும் சில சிறப்புப் பாடல்களில் நடனமாடியுள்ளார். அவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது ‘தி ராஜாசாப்’ படத்திலும் அவர் நடனமாடுவாரா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தை மாருதி இயக்க, பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படம், டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.