நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அனுஷ்கா ஷெட்டி இயக்குநர் கிரிஷ் இயக்கியுள்ள ‘காட்டி’ என்ற புதிய திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்திருந்தது. ஆரம்பத்தில் ஒரு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதாலும், பின்னர் அது மாற்றப்பட்டதாலும், இறுதியில் படம் ஜூலை 11ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், இப்படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் (CG) பணிகள் இன்னும் முடிவடைந்திருக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, இந்த படத்தை தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது வரை எந்தவொரு விளம்பர நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ‘காட்டி’ திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது எனத் தகவல் டோலிவுட் வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் விக்ரம் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.