Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற சரித்திரங்களை கூறுவது முக்கியம்… கண்ணப்பா படம் குறித்து நடிகர் சரத்குமார் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த வாரம் திரைக்கு வர உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தில், சிவபக்தர் கண்ணப்ப நாயனாரின் தந்தை வேடத்தில் நடித்துள்ளார் நடிகர் சரத்குமார். படம் குறித்து அவர் கூறுகையில், 63 நாயன்மார்களில் ஒருவர் மற்றும் மிகச் சிறந்த சிவபக்தரான கண்ணப்பா, நாத்திகராக இருந்தவர் எப்படி சிவபக்தராக மாறினார் என்பது இந்தப் படத்தின் மையக்கரு என்று தெரிவித்தார்.

இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை நியூசிலாந்தில் 120 நாட்கள் எடுத்து இருக்கிறோம். அந்தக் காலத்தை பிரதிபலிக்கும் பின்புலம் தேவைப்பட்டதால் அங்கு சென்று படமாக்கியுள்ளோம். மகாபாரதம் படத்தை இயக்கிய முகேஷ்குமார் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. படம் பார்க்க வந்தவர்கள் குறிப்பாக, கடைசி ஒரு மணி நேரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொன்னபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சிறந்த கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.

இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற சரித்திரங்களை கூறுவது முக்கியம். நெருக்கடி நேரங்களில் நாம் கடவுளைத் தேடுகிறோம். இப்படத்தில் அந்த பக்தியையே அழகாக சொல்லியிருக்கிறார்கள். கடவுள் யார் என்றாலும், அவர் இருக்கிறாரென நம்பும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. பக்தி உணர்வோடு இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் திரைப்படமாக கண்ணப்பா அமையப்போகிறது.

படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை எதுவும் தர வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். விமர்சனம் என்பது ஒவ்வொருவருடைய பார்வைதான். ஆனால் கடுமையாக உழைத்தவர்களுக்கு வெற்றியை வழங்க வேண்டும். மதுரை முருகன் மாநாட்டுக்கு எனக்கு விஐபி அழைப்பு வந்திருந்தாலும், இந்த ஹைதராபாத் நிகழ்வில் கலந்துகொண்டதால்தான் அங்கு செல்ல முடியவில்லை. இதில் அரசியல் ஏதும் இல்லை. இளைஞர்களுக்கு பக்தி சொல்லி கொடுப்பதில் தவறு எதுவுமில்லை. கடவுள் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். இதோ, என் கழுத்தில் கடவுள் டாலர் இருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் அடுத்ததாக 3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மகாபாரதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்” என்றும் அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News