அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்தில் துவங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தில் பணியாற்றிய குழுவினரும் இந்தப் படத்திலும் இணைகின்றனர் என கூறப்படுகிறது.இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்ற உள்ளார். சண்டைக் காட்சிகளுக்கு சுப்ரீம் சுந்தர் இயக்குநராக செயல்படுகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படம் பான் இந்தியா அளவில், பல்வேறு மொழிப் பார்வையாளர்களையும் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், ‘ஏகே 64’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரை இப்படத்தில் நடிக்க அழைக்கும் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.