மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ‘தக் லைஃப்’. இதில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடகாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது ஒரு பேட்டியில், “தமிழ் என்பது கன்னடத்தில் இருந்துதான் பிறந்தது” என்று கமல் கூறியதுக்குப் பிறகு அந்த வார்த்தைகள் தீயாய் பரவ, கர்நாடகாவில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. அந்த மாநிலத்தில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் தடை செய்ய முடியாது எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
மேலும், “கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது உயர் நீதிமன்றத்தின் வேலை இல்லை. அவர் பேசியதற்காக அவரை மிரட்ட முடியாது. கர்நாடகா உயர் நீதிமன்றம் எப்படி இப்படிச் சொல்ல முடியும்?” என்று உச்சநீதிமன்றம் கடும் கேள்வி எழுப்பியுள்ளது. அதையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் படம் திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்ய, பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில், ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் நேரத்தில் பாதுகாப்பு வழங்கப்படும் என மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.