Touring Talkies
100% Cinema

Wednesday, June 18, 2025

Touring Talkies

யு/ஏ சான்றிதழ் பெற்ற தனுஷின் ‘குபேரா’‌ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் மும்பை தாராவியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் த்ரில்லர் வகைசார்ந்ததாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். வருகிற 20ம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாகிறது‌.இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை வாரியத்தால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஒட்டுமொத்த நேரம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News