பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமான ‘மதராஸி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவருடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்கே 23’ என அழைக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும், இந்தியில் ‘தில் மதராஸி’ என்றும் தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது, கடந்த ஆண்டு இதே தேதியில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியானது.
சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில், சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் ‘கனிமா’ பாடலுக்கு, தனது மகன், மகள், மனைவியுடன் இணைந்து மேடையில் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.