Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

ஆயிரமாவது பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில்  ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘இரும்பிலேயே இருதயம்’ பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான மதன் கார்க்கி, தற்போது தனது ஆயிராமாவது பாடலை ‘பறந்து போ’ படத்தில் எழுதியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் உள்ளன. அதில் ‘ஸ்மோக்கிங் கில்ஸ்’ என்ற பாடல்தான் அவரது ஆயிராமாவது பாடலாகும்.

பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் எழுத்தாளராக இருக்கும் மதன் கார்க்கி தற்போது இன்னொரு மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தந்தையான வைரமுத்து 6 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள நிலையில், அந்த சாதனையை மதன் கார்க்கி எதிர்காலத்தில் எட்டலாம் அல்லது மிஞ்சலாம் என கூறப்படுகிறது.

மேலும், அவரது மனைவி நந்தினி ஆங்கிலக் கவிதை தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கில சப்டைட்டில்களையும் எழுதிக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News