மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தக் லைப். இந்த படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாகிய பிறகு ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதன் தாக்கம் வசூலிலும் காணப்பட்டது.
படம் முதல் நாளில் ₹17 கோடி, இரண்டாம் நாளில் ₹7.15 கோடி, மூன்றாம் நாளில் ₹7.75 கோடி, நான்காம் நாளில் ₹6.5 கோடி, ஐந்தாம் நாளில் ₹2.3 கோடி, ஆறாம் நாளில் ₹1.8 கோடி, ஏழாம் நாளில் ₹1.22 கோடி மற்றும் எட்டாம் நாளில் ₹1.15 கோடி எனக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையில், தக் லைப் திரைப்படம் வெளியான எட்டுநாட்களில் மொத்தம் ₹43.39 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.