Touring Talkies
100% Cinema

Monday, June 9, 2025

Touring Talkies

தனுஷின் D56 படத்திற்கான பணிகளை தொடங்கினாரா இயக்குனர் மாரி செல்வராஜ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் 2021ல் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இது தனுஷின் 56வது திரைப்படம்‌. இதனை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ், ‘பைசன் காள மாடான்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் துருவ் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது பின்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தனுஷின் புதிய படத்திற்கான வேலைகளை இயக்குநர் மாரி செல்வராஜ் ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் அவர் ஜப்பான் நாட்டிற்கு சென்று இந்தப் படத்திற்கான லொகேஷன்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கான முழுமையான ஸ்கிரிப்ட் பணியை முடிக்க அவருக்கு சுமார் ஏழு மாதம் பிடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News