மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் தெலுங்குத் திரைப்படம் ‘ராஜாசாப்’. இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை 2023ஆம் ஆண்டு பிரபாஸ், சாய் அலிகான் மற்றும் கீர்த்தி சனோன் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை ஹிந்தியில் வெளியிட்ட எஎ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்போது ‘ஆதிபுருஷ்’ படத்தின் வெளியீட்டால் அந்த நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அதே நிறுவனம் தயாரிக்கும் ‘ராஜாசாப்’ படத்தில் நஷ்டத்தை ஈடுசெய்யும் வண்ணம், தனது சம்பளத்திலிருந்து ரூ.50 கோடியை பிரபாஸ் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்குகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.