Touring Talkies
100% Cinema

Thursday, May 29, 2025

Touring Talkies

சிம்புவின் புதிய படத்தில் ஜாக்கி சான் நடிக்கிறாரா? வெளியான சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள ‘தக்லைப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ள இந்த படத்தில், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அடுத்ததாக, ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49-வது படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். மேலும் இயக்குனர்கள் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனுடன் சேர்த்து, 2023-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றிப் படமான மலையாள திரைப்படம் ‘2018’–ஐ இயக்கிய ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தில் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் கேமியோ வேடத்தில் தோன்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. புரூஸ் லீக்கு பிறகு, அதிரடியான சண்டை காட்சிகளுக்காக உலகம் முழுவதும் பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் ஜாக்கி சான். அவரது சண்டை மற்றும் ஆக்சன் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்த நிலையில், சிம்புவின் படத்தில் சில முக்கிய காட்சிகளில் ஜாக்கி சான் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News