நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாக்கியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் மே 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், நாளுக்குநாள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய கமல்ஹாசன், “தக் லைஃப் கதையின் ஒரு வடிவத்தை நான் எழுதியிருந்தேன். மரணத்திற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என நம்பும் ஒருவரின் கதையாக அது இருந்தது.
அந்த யோசனையை மணிரத்னத்திடம் பகிர்ந்தபோது, அது அவரைக் கவர்ந்தது. பின்பு அவர் அந்தக் கதைக்கு ஒரு வடிவத்தை முழுமையாக உருவாக்கினார். அதுவே இப்போது தக் லைஃப் திரைப்படமாக உருவாகியுள்ளது என தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.