பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. தற்போது, பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஜோடியாக ‘பைரவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். விஜய் கனகமெடலா இயக்கியுள்ள இந்த படம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கான விளம்பர பணிகளுக்காக அதிதி ஷங்கர் தற்போது ஐதராபாத் நகருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பேசும் போதே, இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதைக் கூறினார். அவர் தெரிவித்ததாவது:
எனது முதல் தமிழ் படத்தை பார்த்த இயக்குனர் விஜய், ‘பைரவம்’ படத்துக்கு நான் பொருத்தமானவள் என்று நினைத்து, இந்த வாய்ப்பை வழங்கினார்.தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நடித்தபோது எனக்கு அந்த எண்ணமே வரவில்லை. என் சிறுவயதில் நான் அப்பாவுடன் ராமோஜி பிலிம் சிட்டிக்கு வந்த அனுபவம் உண்டு. ஆனால், ஒரு நாள் நான் அந்த இடத்தில் என் படத்தின் படப்பிடிப்புக்காக வருவேன் என்று ஒருபோதும் நனைவிலும் கூட நினைக்கவில்லை. இன்று அந்த கனவு நனவாகியுள்ளது போல உணர்கிறேன்” என்றார்.