2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’ இயக்குனர் பிரேம் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவானது. பள்ளிக் கால காதலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர், 2020ஆம் ஆண்டு ‘ஜானு’ என்ற பெயரில் இதே கதையைத் தெலுங்கில் ரீமேக் செய்தார் பிரேம் குமார்; அந்தப் படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்தனர். இதையடுத்து கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தையும் இயக்கினார் அந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்நிலையில், பிரேம் குமார் பல வருடங்களாக விரும்பிய வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து அவருக்குப் பரிசளித்துள்ளனர்.
இந்த கார் வாங்க நீண்ட காலமாக காத்திருந்தேன். சலிப்பாகி விட்டதே என்று எனது மனதில் தோன்றிய போதிலும், சூர்யா சார் இந்த கார்ரை பெற தொடர்ந்து முயற்சி செய்து இந்தக் கார் தனக்கு வாங்கி கொடுத்ததாக, இயக்குனர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.