ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் சில படங்களில் ‘அவெஞ்சர்ஸ்’ படமும் ஒன்று. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒன்று சேர்த்து உருவான அந்தக் கலவையின் முக்கிய கதாபாத்திரமான தோர்ஆக நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடம் பிடித்தவர் ஆஸ்திரேலிய நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வர்த்.அமேசான் எம்.ஜி.எம். ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ‘சப்வெர்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படம் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பலினுள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களையும், அதனைக் கையாளும் கடற்படை மாலுமியையும் மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
