கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் சந்தானம். 2016-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படங்கள் இரண்டும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றன. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, இப்போது இந்த தொடரின் மூன்றாவது பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் உருவாகியுள்ளது.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஆப்ரோ. இந்த படம் வரும் மே மாதம் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல நடிகர்களான விஷால், சிம்பு மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.