Touring Talkies
100% Cinema

Monday, April 28, 2025

Touring Talkies

நடிகை ஸ்ரீலீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்பிபிஎஸ் படித்து முடித்த ஸ்ரீலீலா, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானவர். தன்னுடைய 21வது வயதிலேயே, 2022ம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.இப்போது மூன்றாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். அதுப்பற்றி, “வீட்டிற்குள் மற்றுமொருவர்… இதயங்களின் மீதான படையெடுப்பு… மேலும் மூச்சுத் திணற வைக்கும் மூச்சுத் திணறலுக்கு…,” என அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து இப்படி பதிவிட்டுள்ளார்.அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சில நடிகைகள் மட்டுமே சினிமாவைத் தவிர்த்து சமூக சேவைகளிலும் ஆர்வமாக இருந்து சில நல்லவற்றைச் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News