மலையாள திரைப்பட உலகத்தில் இயக்குநர் பிரியதர்ஷனும், எப்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் மோகன்லாலின் கூட்டணியில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் தான் “ஒப்பம்”. இந்தப் படத்தில் மோகன்லால் முழுக்க முழுக்க பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். அவர் பணிபுரியும் ஒரு செல்வந்தரின் இல்லத்தில் பழைய வெறுப்பின் காரணமாக குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகின்றனர். அந்தச் சூழலில், அந்த வீட்டில் இருக்கும் ஒரு சிறிய குழந்தையை காப்பாற்ற பார்வையற்ற மோகன்லால் போராடும் கதைதான் இப்படத்தின் மையக்கரு. இப்படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். த்ரில் மற்றும் உணர்வுகளை இணைத்துப் உருவாக் இப்படம் வெளியானபின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்த படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் கடந்த பிறகு, தற்போது இந்தக் கதையை ஹிந்தியில் ரீமேக் செய்யும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. இந்த ரீமேக் படத்தையும் அசல் படத்திற்கும் இயக்குனராக இருந்த பிரியதர்ஷனே இயக்கவுள்ளார். மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் இந்த ரீமேக்கில் சைப் அலிகான் நடிக்கவிருப்பதாகவும், வில்லனாக நடிகர் பாபி தியோல் தேர்வாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி சைப் அலிகான் சமீபத்தில் கொடுத்த பேட்டியிலேயே தெரிவித்தார்.
மேலும், இயக்குநர் பிரியதர்ஷன் தனது 100-வது திரைப்படமாக மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஒருவேளை அந்தப் படத்தை முடித்த பிறகு தான் இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் பற்றி இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.