விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படமும் மே 1ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி நவீன தொழில்நுட்பத்தில் திரைக்கு வரவுள்ளது.

2014ஆம் ஆண்டு வெளியான ‘வீரம்’ திரைப்படத்தை இயக்கியவர் சிவா. இந்தப் படத்தை விஜயா புரொக்ஷன்ஸ் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரீப் ராவத், அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். ஒளிப்பதிவை செய்தவர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.