பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘ஜாத்’ ஆகும்.இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படம் ரூ.70 கோடியைத் தாண்டிய வசூலை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டச் கியா’ என்ற பாடலுக்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடனமாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகியுள்ளது. இதில் டான்ஸ் மாஸ்டர் ஜானி koreographer ஆக பணியாற்றியுள்ளார்.இதுகுறித்து ஜானி இணையத்தில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “ஊர்வசியுடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சந்தோஷமளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையொருவரான சமந்தா, சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகிய ‘சிட்டாடல்’ எனும் தொடரில் நடித்திருந்தார். தற்போது அவர் மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ எனும் பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளார்.‘சுபம்’ எனும் இந்தப் படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்குகிறார். இதில் பல புதிய முகங்கள் நடித்துள்ளனர்.இது சமந்தா தயாரித்துள்ள முதல் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்ததாக உள்ளது. தற்போது, இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியிடப்படவுள்ளது.