பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. அதேபோல், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் முழுமையாக முடிவடைய தயாராகி வருகிறது. இந்த படம் எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், படக்குழுவினர் வாழ்த்துக்களுடன் கூடிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில், இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு முன்னோட்ட வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், “ஒரு பீட்டு இரண்டு தக்ஸ்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.