Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

புதிய ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘கண்ணப்பா’ படக்குழு… எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆன்மிக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. இந்த படத்தை, மகாபாரதம் தொடரை இயக்கிய புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இத்திரைப்படம், சிவபெருமானை ஆழமாக பக்தியுடன் வழிபட்ட கண்ணப்பர் என்ற பக்தனின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தொடக்கத்தில் ஏப்ரல் 25ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், அதே தேதியில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாது என படக்குழு அதிரடியாக அறிவித்தது. இதற்கான காரணமாக, VFX வேலைகளுக்கு இன்னும் சில காலம் தேவைப்படுவதாகவும், எனவே படம் தாமதமாக வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படம் வெளியாகும் புதிய தேதி குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அதன் படி, ‘கண்ணப்பா’ திரைப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News