அனிமல் மற்றும் புஷ்பா – 2 ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியான வெற்றியின் மூலம், நடிகை ரஷ்மிகா தெற்கிந்திய திரைப்பட உலகத்தில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். தற்போது தெலுங்குப் படங்களைத் தாண்டி ஹிந்திப் படங்களில் நடித்து, ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரையிலான சம்பளத்தை பெறக்கூடிய அளவுக்கு வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை ரஷ்மிகா முக்கிய கதாநாயகியாக நடித்திருக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend)’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் வைரலானது. இந்தப் படத்தை ‘கீதா ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனராக ராகுல் ரவீந்திரன் பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் பான் இந்தியா ரிலீஸாக திரைக்கு வர உள்ளது.இந்நிலையில், ரஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.