2019-ஆம் ஆண்டில் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி, மோகன்லாலின் நடிப்பில் ‘லூசிபர்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டனர். படம் வசூலில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த போதும், இது மத விவாதங்களில் சிக்கியது என்பதோடு, முதல் பாகத்தைப் போல இல்லையே என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்த படத்திற்கு மூன்றாவது பாகமும் இருக்கப்போகிறது என்பதைப் பற்றி பிரித்விராஜ் ஒரு புரமோஷன் நிகழ்வில் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இரண்டாம் பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்திற்கு ‘அஸ்ரேல்’ என்ற பெயர் வைக்கப்படலாம் என இசையமைப்பாளர் தீபக் தேவ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, எம்புரான் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் உஷா உதூப்பின் குரலில் இடம்பெற்ற பாடலில் ‘அஸ்ரேல்’ என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, மூன்றாம் பாகத்திற்கு இது பொருத்தமான தலைப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.