லெஜண்ட் சரவணா தனது, சமூக வலைதளப் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு ரீசன்ட் கிளிக்ஸ், சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் வரும் எனவும் கேப்ஷன் இட்டுள்ளார். இந்த நியூ லுக் கருடன் பட இயக்குனரின் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்திற்கானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் கமெண்ட் செக்ஷனில் அவரது இரண்டாவது படத்திற்கான அப்டேட்டுகளை கேட்டு வருகிறார்கள். மேலும் அவரே அப்டேட்டுகள் விரைவில் வரும் எனத் தெரிவித்துள்ளதால், படத்தின் டீசர் வெளியீடு குறித்த அப்டேட்டுகளாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
