கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘மெய்யழகன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவருடன் அரவிந்த்சாமி நடித்துள்ளார், பிரேம் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு, தற்போது ‘வா வாத்தியாரே’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் விரைவில் இப்படம் வெளியீடுக்கு தயாராக உள்ளது.

இதற்குப் பிறகு, ‘சர்தார் 2’ படத்திலும் நடித்து வருகிறார். அதோடு, ‘கைதி 2’ படமும் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 படமும் அவரது கைவசம் உள்ள ஒரு முக்கியமான படம்.இந்நிலையில், அண்மையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தனது புதிய கதையை கார்த்தியிடம் கூறியுள்ளார். இந்தக் கதை கார்த்திக்கு மிகவும் பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இப்படம் விரைவில் அடுத்த கட்டத்திற்காக முன்னேறி வருகிறது, மேலும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. மேலும், இது கவுதம் மேனன் பாணியில் ஆக்ஷன் கலந்த திரில்லராக உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் கார்த்தி மற்றும் கவுதம் மேனன் மற்றும் கார்த்தி உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது