நடிகர் தளபதி விஜய் தற்போது தான் நடித்த வரும் 69வது படமான ஜனநாயகன், தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார் பாபி தியோல். அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். அதைத்தொடர்ந்து தற்போது ஜனநாயகன்படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பாபி தியால் கூறும்போது, “தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறேன். அவர் உண்மையிலேயே ஸ்வீட் ஹார்ட் கொண்டவர். எப்போதுமே அன்பாகவும் பணிவாகவும் பழகக் கூடிய நபராக இருக்கிறார். அவரைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.