மேற்கத்திய மற்றும் கர்நாடக இசையின் கலவையாக இசைஞானி இளையராஜா உருவாக்கிய ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை கடந்த 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றப்பட்டது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி இசையை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா நிலைநாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசையையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.

அதேபோல் இளையராஜாவை சிம்பொனி எழுத தன்னை ஊக்கப்படுத்தியதாக கூறினார். இதன் பின்னணியில், இளையராஜா, லிடியன் நாதஸ்வரத்தை சிம்பொனி எழுதச் சொன்னதாக இணையத்தில் தகவல்கள் பரவத் தொடங்கின. இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசைக்காக ஒரு டியூன் உருவாக்கி, அதை என்னிடம் கொண்டு வந்து கேட்கச் செய்தார். ஆனால், அது சிம்பொனி இசையாக இல்லை, ஒரு திரைப்படப் பாடல் போல் இருந்தது. எனவே, ‘சிம்பொனி என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டு பின்னர் இசையமைக்க வேண்டும்’ என்று அவரிடம் கூறினேன். லிடியன் என்னிடம் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்காக வந்தார். எனவே, யாரும் என்னை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நடந்துகொள்ள வேண்டாம்” என்று விளக்கம் அளித்தார்.