‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில், த்ரிஷா, அஜித்துக்கு மீண்டும் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்தப் படத்தின் டீசர் வெளியானது, ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்த டீசரில், அஜித் கைது செய்யப்பட்டு சிறையில் செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது.
ஆனால், அஜித் சிறைக்கு செல்லும் பிறகு, அங்கு ஒரு அதிரடியான சண்டைக் காட்சி இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் படமாக்கப்பட்ட இந்த ஆக்ஷன் காட்சியில், அஜித் டூப்பை பயன்படுத்தாமல் நேரடியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அதிரடி சண்டைக் காட்சி, அஜித் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறது. வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி, உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.