ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் நடிகர் அஜித் விதவிதமான கலரிங் அணிந்திருந்த சட்டை இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அந்த சட்டையின் விலை ரூ.1.8 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது
