Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசு… தான் தாயாக போவதை அறிவித்த கேம் சேன்ஜர் பட நாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை கியாரா அத்வானி, தான் தாயாக போவதாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.2016-ல், “எம்.எஸ். தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தின் மூலம் கியாரா அத்வானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானார். பின்னர், அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்ததால், அவர் பெரும் புகழைப் பெற்றார்.

சமீபத்தில், ஷங்கர் இயக்கிய ராம்சரண் நடிப்பில் வெளிவந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2023-ம் ஆண்டு, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது, கியாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசு… விரைவில் வரவிருக்கிறது!” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, குழந்தைகளுக்கான காலணியின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வெகுவான வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News