பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஷான். வீஜே பாவனா உடன் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். விஜயின் “வாரிசு”, சுந்தர் சியின் “காபி வித் காதல்”, விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சம்யுக்தா, கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து, அவருடன் ஒரு மகன் உள்ள நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தற்போது, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்ட அவர், விவாகரத்து தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. முந்தைய காலத்தை விட, இப்போது நான் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.