மார்க் ஆண்டனி, எனிமி, லென்ஸ், வெள்ளை யானை போன்ற பல படங்களை மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் வினோத். தற்போது அவரின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குனர் சரன்ங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், சிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு சித்து குமார் இசையமைக்கிறார் என இன்று அறிவித்துள்ளனர். மேலும், இதன் அறிவிப்பை கடந்த காலங்களில் தியேட்டர் டிக்கெட் போன்று டிசைன் செய்து வெளியீட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
