கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016 ஆம் ஆண்டு “தில்லுக்கு துட்டு”, 2023 ஆம் ஆண்டு “டிடி ரிட்டர்ன்ஸ்” ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த படத் தொடரின் மூன்றாம் பாகமாக “டிடி: நெக்ஸ்ட் லெவல்” உருவாகியுள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து, கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மே மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாடல் “கிஸ்ஸா 47” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை கவிதி எழுதியுள்ளார், இசையை ஓப்ரா அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.