Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மாஸ் லுக்கில் கவின்… வெளியான மாஸ்க் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின். லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். ஆனால், சமீபத்தில் வெளியான அவரது பிளடி பெக்கர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கும் புதிய திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு மாஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்

இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் மற்றும் பிளாக் மெட்ராஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. தற்போது, படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், படக்குழுவினர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News