தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து, மாயவன், தணல் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.2023 ஆம் ஆண்டு, லாவண்யா திரிபாதியும் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜும் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில், லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தாதினேனி சத்யா இயக்கும் இப்படத்திற்கு சதிலீலாவதி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், சகுந்தலம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது, இதன் தொடக்க நிகழ்விற்கான வீடியோவும் படக்குழுவால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தை கோடை பருவத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.