தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சந்து மொண்டேட்டி. அவர் இயக்கியுள்ள சமீபத்திய படம் ‘தண்டேல்’. இதில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சந்து மொண்டேட்டி தனது அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, சூர்யாவுடன் உருவாகும் புதிய படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை குறித்து சந்து மொண்டேட்டி வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், “இந்த படம் மிகப்பெரிய கதையாக இருக்கும். இப்படத்திலிருந்து ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்திருக்கலாம். கதையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு நடிகராக சூர்யா இப்படத்தை இன்னும் உயர்ந்த நிலையில் கொண்டு செல்ல முடியும். தற்போது இதைவிட அதிகமாக கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.தற்போது, சூர்யா தனது 45-வது படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தவிர, வெற்றிமாறன் இயக்கத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.