சிங்கம் அகைன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அர்ஜூன் கபூர் நடித்துள்ள படம் ‘மேரே ஹஸ்பண்ட் கி பிவி’. முடாசர் அசீஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பூமி பட்னேகர், ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாக நடித்துள்ளனர். காமெடியுடன் கூடிய காதல் படமாக உருவாகியுள்ளது. நாளை (பிப்.,21) ரிலீசாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன் கபூர் பேசியதாவது: எந்தவொரு படத்திற்கும் புரமோஷன் முக்கியமாக பார்க்கப்படுகிறது. புரமோட் செய்தால் தான் ரசிகர்களுக்கு படத்தை கொண்டு செல்ல முடியும், அவர்களை பார்க்க வைக்க முடியும். அவற்றில் பல வகைகள் இருக்கலாம். ஆனால், புரமோஷன் செய்தால் மட்டுமே படம் வெற்றியடைந்துவிடும் என உறுதியளிக்க முடியாது. படத்தை பார்த்து, வெற்றியடைய செய்யலாமா என்பதை ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.
