2018ஆம் ஆண்டு வெளியான “96” திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி. பிரேம்குமார். அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் வெளியான “மெய்யழகன்” திரைப்படத்தையும் இயக்கி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157943.png)
இதற்கிடையில், மலையாள சினிமாவின் இரண்டு மிகப்பெரிய நடிகர்கள்—மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் பணியாற்றும் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157944.jpg)
இது குறித்து அவர், மம்முட்டி சார், மோகன்லால் சார் ஆகியோரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களுடன் இணைந்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்பதே என் நீண்டநாள் கனவும், லட்சியமும். அதேசமயம், தற்போதைய பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் போன்ற நடிகர்களின் நடிப்பும் மிகவும் பிடிக்கும். விரைவில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.