ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குட் பேட் அக்லி”. இந்த படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அவருடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார், மேலும் ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையமைப்பை மேற்கொள்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157025-724x1024.jpg)
“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் First Look மற்றும் Second Look போஸ்டர்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் இடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157916-1.png)
இதற்கிடையில், ஜி.வி. பிரகாஷ் தனது X தளத்தில், “ஒரு சிறப்பு ப்ராஜக்டிற்கான பின்னணி இசையை இன்று தொடங்கினேன். கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும். டயர் ஸ்டார்ட்ஸ் நவ்!” என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் “குட் பேட் அக்லி” திரைப்படத்தைப் பற்றியே கூறுகிறார் என சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.