Tuesday, February 11, 2025

8 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்த சீனாவின் Ne Zha 2 திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆன அனிமேஷன் படம், நே ஜா 2. இந்தப் படம் 16ஆம் நூற்றாண்டில், வெளியான சீன நாவலான இன்வெஸ்டிச்சர் ஆஃப் தி காட்ஸ் என்ற நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜியாஸ் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டது போல் படம் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வெளியானது. அதாவது அன்றைய தினத்தில் சீனப் புத்தாண்டு. சீனப் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன நே ஜா 2, பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 8000 கோடிகள் வசூல் குவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் குவித்த படமாக இந்தப் படம் மாறியுள்ளது. மேலும் ஆங்கிலம் இல்லாத படங்களில் அதிக வசூல் குவித்த படமாகவும் இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News