2023ஆம் ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘2018’. கேரளாவில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், மலையாள மொழியைத் தாண்டி இந்திய அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது. மேலும், 2023ஆம் ஆண்டில் அதிகம் வசூலித்த திரைப்படமாக இது குறிப்பிடப்பட்டது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157606.jpg)
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜூட் ஆண்டனி ஜோசப் தனது அடுத்த படத்தை தமிழில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாமல் படம் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. இதைத் தவிர, வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிம்புவை கொண்டு ஒரு புதிய படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியானது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157608.png)
தற்போது, சிம்புவை வைத்து இயக்கவிருந்த அந்த படம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை, ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்க, இதில் நடிகர் ஆர்யா தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.