பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரனின் மறைவுக்கு பின் முதல் முறையாக ஊடகமொன்றில் பேட்டியளித்த அவரது மனைவி தீபா, நேத்ரன் குறித்து ரசிகர்கள் அறியாத பல தகவல்களையும், அவரது மரணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், ‘நேத்ரனின் அப்பா எம்.ஜி.ஆர், வீ.கே.ராமசாமி ஆகியோருக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். இதன் காரணமாகத்தான் நேத்ரனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேத்ரன், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்’ என்று கூறியுள்ளார்
