நடிகர் சிம்பு, “தக் லைப்” படத்தை முடித்துவிட்டு, அடுத்து “பார்க்கிங்” பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில், சிம்பு கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருக்கிறார்.இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.ஆனால், சாய் பல்லவி, தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை கவனமாக ஆராய்ந்த பிறகு மட்டுமே திரைப்படங்களை தேர்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.