சூர்யாவின் 44வது திரைப்படமான “ரெட்ரோ”-வை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156323-819x1024.jpg)
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டது என்பதுடன், அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில், “ரெட்ரோ” படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156322-640x1024.jpg)
படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டீசர்-களை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை காமிக் வடிவத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வாரம் தோறும் ஒரு காமிக் ஸ்டைல் காட்சி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.