ராயன் திரைப்படத்திற்குப் பின்னர், தனுஷ் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156316-655x1024.jpg)
மேலும், இந்தத் திரைப்படத்தின் “கோல்டன் ஸ்பேரோ” மற்றும் “யெடி” ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளிவந்ததுமுதல் சிறந்த வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156275.jpg)
படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் அனிகா, மாதியு தாமஸ் மற்றும் மற்ற நடிகர்கள் பாரில் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.