தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்த கதைகளுடன் உருவாகும் படங்கள் அதிகம் கேரள சினிமாவில்தான் வருகின்றன. தற்போது அங்கு வெளியாகும் படங்கள் 100 கோடி, 200 கோடி வசூலை எட்டியுள்ளன. இதையடுத்து, கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஜூன் 1ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155718.jpg)
இந்த விவகாரம் தொடர்பாக, தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ் குமார் கூறியதாவது, பொழுதுபோக்கு வரி மற்றும் சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால், தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதை குறைக்க அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூன் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடத்தாது என முடிவு செய்துள்ளோம்.
மேலும், நடிகர்களின் அதிக சம்பளமும் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 60% தொகை நடிகர்களுக்கு செல்கிறது. 2024 ஜனவரியில் மட்டும், கேரள திரைப்படத் துறைக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.